"அடிச்சுக்கூட கேட்பாங்க... அப்பவும் சொல்லிராதீங்க" காமெடி பாணியில் 'குளத்திற்குள் பதுங்கியிருந்து' 2 மணி நேரமாக தண்ணி காட்டிய குற்றவாளி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 09, 2020 03:18 PM
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், பயங்கர ஆயுதங்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனால் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையிலான போலீஸார் அவரைப் பிடிப்பதற்காகச் விரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் பாஸ்கர் மறுகரையில் ஏறி தப்பி ஓடினர். உடனே இதுபற்றி வாக்கிடாக்கி மூலம் தகவல் அளித்த போலீஸார் அவரை விரட்டிச் சென்றுள்ளனர்.
வயர்லெஸ் தகவல் மூலம் சுத்தமல்லி காவல்நிலைய போலீஸார் எதிர்முனையில் இருந்து வந்துள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர் மீண்டும் வந்த வழியாகத் திரும்பி ஓடியிருக்கிறார். வயல்வெளிக்குள் ஓடிய அவர் வழியில் இருந்த குளத்திற்குள் குதித்துவிட்டார். அதனால் போலீஸார் குளத்தைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.
குளத்துக்குள் பதுங்கிய பாஸ்கர், உள்ளே இருந்து வெளியேற மறுத்ததுடன் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக் குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று நீச்சல் அடித்தபடியே நின்றுள்ளார்.
குளத்துக்குள் இருந்து வெளியே வர மறுத்த பாஸ்கரைப் பிடிப்பதற்காகத் தீயணைப்புத் துறையின் உதவியை போலீஸார் கேட்டார்கள். அதனால் ரப்பர் படகுடன் வந்த தீயணைப்புத் துறையினர் குளத்துக்குள் இறங்கினார்கள். ஆனால் பிடிகொடுக்காத பாஸ்கர் அங்குமிங்கும் நீச்சல் அடித்துச் சென்றார்.
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அவரைப் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்கள். பின்னர் போலீஸார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். , போலீசாருக்கு தண்ணி காட்டிய சம்பவத்தை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.