'கன்னியாகுமரி' அருகே பயங்கரம்... சப்-இன்ஸ்பெக்டர் 'துப்பாக்கியால்' சுட்டுக்கொலை... மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 09, 2020 12:39 AM

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Shocking Incident: Sub-Inspector Shot dead in Kanyakumari

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் இன்று படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரை வில்சன் நிறுத்தியபோது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் துப்பாக்கியால் வில்சனை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காவலர் வில்சன் ஆபத்தான நிலையில், சக காவலர்களால்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே வில்சன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கன்னியாகுமரி முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.