VIDEO: ‘வேறலெவல் யாக்கர்’.. ‘சிதறிய ஸ்டம்ப்’.. கடைசி டி20-யில் தரமான சம்பவம் செஞ்ச இளம்வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jan 11, 2020 05:10 PM
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் (54) மற்றும் ஷிகார் தவான் (52) கூட்டணி ஆரம்பமே அதிரடி காட்டியது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே (31), விராட் கோலி (26) என அவர்கள் பங்குக்கு விளாசி தள்ளினர். இதில் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் 8 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்ட்ரி உட்பட 22 ரன்கள் விளாசி மிரளவைத்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 201 ரன்களை குவித்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இலங்கை அணியைப் பொருத்தவரை அதிகபட்சமாக மேத்யூஸ் 31 ரன்களும், தனஞ்ஜெயா சில்வா 57 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்த நிலையில் 15.5 ஓவர்களில் இலங்கை அணி 123 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
இப்போட்டியின் 4-வது ஓவரை வீசிய இளம் பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, யாக்கர் பந்து வீசி இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவின் விக்கெட்டை வீழ்த்தினார்.