கத்தியால் வெட்டி, துப்பாக்கியால் சுட்டு... 'பதறவைத்த' எஸ்.ஐ படுகொலை... குற்றவாளிகளை 'தட்டித்தூக்கிய' போலீஸ்?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 10, 2020 03:48 PM
நேற்று முன்தினம் கன்னியாகுமரி களியக்காவிளை செக் போஸ்டில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மூன்று பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். சுட்டது மட்டுமின்றி அவரது உடலை இழுத்து கத்தியாலும் வெட்டினர். பொதுமக்கள் சத்தம் கேட்டு வரவில்லை என்றால், அவரது உடலை முழுவதுமாக சிதைத்து இருப்பர் என்று கூறப்படுகிறது.

தமிழகம், கேரள மாநிலங்களை பதறவைத்த இந்த படுகொலையால் காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும், தமிழக போலீசாருடன், கேரள போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாகவும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் தெரிவித்து இருக்கிறார்.
இந்தநிலையில் கேரள மாநிலம் பூத்துறையில் வைத்து ஒருவரையும், பாலக்காடு பகுதியில் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
