"மாப்ள நம்ம ஆளுங்கள இறக்குடா?..." "ஒறண்டை இழுத்துட்டான் ஒருத்தன்..." 'டாஸ்மாக்' பார்-ஐ சூறையாடிய 'கும்பல்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 10, 2020 04:40 PM

திருப்பூரில் போதை தலைக்கேறிய சிலர் தகராறில் ஈடுபட்டு டாஸ்மாக் பாரை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை  சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.

A gang ravaged the tasmac bar-Police searching CCTV footage

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை, பொன்கோவில் நகர், முயல்பண்ணை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அதில், சபாபதி என்பவர் பார் நடத்தி வருகிறார்.

நேற்று பிற்பகல் இங்கு வந்த 3 பேர், மாலை வரை மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் பாரில் உள்ள ஊழியர்களை தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட வினோத்குமார் என்பவரை தாக்கி, அவரிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்க நகைகளையும் பறித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், 3 பேர் கொண்ட தங்களது நண்பர்களை போன் போட்டு அழைத்துள்ளனர். பின்னர், அனைவரும் பாரில் இருந்த பிரிட்ஜ், பாத்திரங்கள், மண் சட்டிகள் உள்ளிட்டவற்றை உடைத்து சூறையாடினர். இதுகுறித்து வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தகராறில் ஈடுபட்ட கும்பலை  தேடி வருகின்றனர்.

Tags : #TASMAC #LOOTED #MOB #POLICE #SEARCHING #CCTV FOOTAGE