'எஸ்.ஐ சுட்டு கொலை'... 'திடுக்கிடும் திருப்பம்'... 'குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா'?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 09, 2020 02:33 PM

காவல் சிறப்பு ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Sub Inspector Wilson Shot Dead, 2 men suspected to be behind murder

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்காக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே காரில் வந்த இருவர், வில்சனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த கோர சம்பவத்தில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்த சம்பவம் குறித்து 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வரும் நிலையில், தப்பி சென்ற குற்றவாளிகள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வில்சன் கொலை தொடர்புடைய 2 சந்தேக நபர்களின் புகைப்படைங்களை வெளியிட்டு உள்ளனர்.

அதில் முகமது சமி, கவுசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. முகமது சமி, கவுசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #MURDER #SUB INSPECTOR WILSON #MARTHANDAM #SHOT DEAD #SUSPECT PHOTO