திருமணமான 'இளம்பெண்' திடீர் மாயம்... யாராவது 'கடத்தி' சென்றார்களா?... போலீசார் தீவிர விசாரணை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 09, 2020 12:17 AM

திருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மாயமானதால், அவரது கணவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

Young Women Missing near Thirubhuvanai, Police Investigate

திருபுவனை அருகேயுள்ள திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி அனிதா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்குவதாக சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கன்ணன் போலீசில் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அனிதா தானாக எங்காவது சென்றாரா? இல்லை அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா? என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #POLICE