12 லட்சம் ரெக்வஸ்ட்.. 8 லட்சம் விசிட்.. சர்வரே 'முடங்கி' போச்சு.. கொஞ்சம் 'டைம்' குடுங்க பக்தர்களே!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 10, 2019 04:39 PM
கைலாசா தனி நாடு வலைதளப் பக்கத்தை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்ப்பதால், சர்வர் முடங்கிப்போய் வேறு சர்வர் மாற்ற வேண்டிய வந்ததாக நித்யானந்தா சலித்து கொண்டிருக்கிறார்.

நித்யானந்தா தங்களது நாட்டில் இல்லை என ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று தன்னுடைய சீடர்களை பேஸ்புக் நேரலையில் தொடர்பு கொண்ட நித்யானந்தா, மிகவும் சந்தோஷத்துடன் பேசியிருக்கிறார்.
அதில் அவர், '' கைலாசாவின் பெயரை ஸ்ரீ கைலாசா என மாற்றுகிறேன். தினமும் 1 லட்சம் பேர் கைலாசாவில் இணைகின்றனர். இதுவரை 12 லட்சம் பேர் ஈ-சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒருசில நாடுகள் தங்கள் நாடுகளில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பதிலளிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள். இவ்வளவு பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பலர் நிலம் தருவதாக முன்வந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள அவர்களுக்கு நன்றி. சில நாடுகளின் அரசுகள், எங்களை அதிகாரபூர்வமாக அணுகி கைலாசா நாடு அமைக்க அழைத்துள்ளனர். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை அவர்களுக்கு எனது நன்றி. விரைவில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவோம். மிக விரைவில் கைலாசாவிற்கு இடமும் அமையும். அப்படி அமைந்தால் அது பற்றி அறிவிப்பேன். கைலாசா தனிநாடு பக்கத்தை ஒருநாளைக்கு 8 லட்சம் பேர் பார்ப்பதால் சர்வர் முடங்கி விட்டது. இதனால் தற்போது வேறு சர்வர் மாற்றி உள்ளேன்,'' என சந்தோஷமாக சலித்து கொண்டிருக்கிறார்.
உலகில் உள்ள பல நாடுகளின் இந்திய தூதரகங்கள் வழியாக நித்யானந்தா தேடப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ள நிலையில், நித்யானந்தா புதிது புதிதாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
