'முதலைகளிடம் சிக்கிய 2 வயது குழந்தை'... 'பதறவைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Jul 03, 2019 12:43 PM

கம்போடியாவில் முதலைகளுக்கு நடுவே சிக்கிய 2 வயது குழந்தையின், மண்டை ஓடு மட்டுமே மிஞ்சிய சம்பவம் பதறவைத்துள்ளது.

Crocodiles eat 2 year old girl alive in Cambodia

சியம் ரியாப் என்ற இடத்தில் முதலைப் பண்ணை நடத்தி வருபவர், 35 வயதான மின் மின். இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பண்ணை வேலையாக வெளியே சென்றுவிட்டார். இவரது மனைவி புதிதாக பிறந்த குழந்தையை, வீட்டில் கவனித்துக் கொண்டிருந்தார். இவர்களது மூத்த மகளான 2 வயது ரோம் ராத், தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். வெளியே சென்றுவிட்டு மின் மின் திரும்பிவந்து பார்த்தபோது, தனது மகள் ரோம் ராத் காணாததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

பின்னர், முதலைப் பண்ணையில் பார்த்தப்போது, அங்கு அவரின் 2 வயது மகளின் மண்டை ஓடு மட்டுமே கிடைத்தது. புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் இடையில், தவறி விழுந்த ரோம் ராத்தை, முதலைகள் கடித்து குதறி தின்றிருந்தது.  முதலைகள் கடித்துக் குதறியதைக் கண்டதும், குழந்தையின் தாய் தனது மகளின் மண்டை ஓட்டை மட்டும் வைத்து செய்வதறியாமல் கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CROCODILE #CAMBODIA #CHILD #SKULL