'பார்ரா'.. 'காரில் இருந்து பணத்தைத் திருடியதும்'.. திருடன் செய்த பலே காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 14, 2019 05:01 PM

நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பணத்தைத் திருடிய திருடன், பணத்தைத் திருடிவிட்டு, திருடிவிட்ட சந்தோஷத்தில், துள்ளிக் குதித்து ஓடும் வீடியோ சிசிடிவியில் பதிவாகி வைரலாகி உள்ளது.

Thief runs happily by jumping after stealing money from car

பொதுவாகவே திருடர்கள் திட்டமிட்டு திருடும்போது, திருடிவிட்டு அந்த இடத்தை விட்டே நகர்ந்துவிடுவார்கள். கைதேர்ந்த திருடர்கள் சிசிடிவி உள்ளிட்டவற்றையெல்லாம் அவகாசம் எடுத்து கண்காணிப்பது உண்டு. ஆனால் புதிய திருடர்கள் தடயத்தை விட்டுச் செல்வார்கள் என்பது போல திருடிவிட்டு திருடன் ஒருவன் செய்துள்ள இந்த காரியம் பலருக்கும் நகைப்பினை ஊட்டியுள்ளது.

அப்படித்தான் தாராபுரத்தில் சண்முக சுந்தரம் என்பவர், வங்கியில் இருந்து எடுத்த 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை காரில் எடுத்துவந்துள்ளார். வரும் வழியில்,  காரை நிறுத்துவிட்டு, கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரில் இருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

காவல் நிலையத்தில் பின்னர் அவர் புகார் அளித்தபோது, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான், திருடன் காரைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டதும், சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து செல்லும் காட்சிகள் போலீஸாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #CCTV #THEFT