‘சென்னைக்கு மழை இருக்கா?’... 'தமிழ்நாடு வெதர்மேனின் பதில் இதுதான்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 13, 2019 09:47 PM
தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாது தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மெகா மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘ஸ்ரீஹரிகோட்டாவில் மேகங்கள் ஒன்றிணைவதை பார்க்க முடிகிறது. தற்போது மழை பெய்து வருகிறது மகிழ்ச்சி. இந்த மழை நாளையும் தொடரலாம். மேகங்கள் மழையை உண்டாக்கும் சூழலை பார்க்க முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
