'வேலை வாங்கித் தருவதாகக் கூறி'... '15 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து'... 'சென்னையில் நடந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 11, 2019 12:47 PM

சென்னையில் 15 வயது சிறுமியை 3 நாட்கள் அடைத்து வைத்து, 5 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 year old girl sexual assault by 5 persons in chennai

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், பாட்டியுடன் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3-ம் தேதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு  வெளியேறினார். தனது தோழியை சந்தித்துவிட்டுத் திரும்பும் போது, அப்பகுதியைச் சேர்ந்த ஜெபிமா என்ற பெண் சிறுமியை விசாரித்துள்ளார். அவர், தான் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்ததுடன், வேலை தேடப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியை வியாசர்பாடியில் தங்கவைத்துள்ளார் ஜெபிமா. பின்னர் முசினா பேகம் என்ற மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து, புரசைவாக்கம் முத்து தெருவில் உள்ள, நிஷா என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக, சிறுமியை இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அந்த சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்து, 5 பேர் மூன்று நாட்களுக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

3 நாட்களுக்குப் பிறகு கடந்த  7-ம் தேதி, அங்கிருந்த தப்பித்த சிறுமி,  உடலில் பலத்த காயங்களுடன் வீடு திரும்பியதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரித்தபோது தமக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஜெபிமா, முசினா பேகம், நிஷா ஆகிய 3பெண்களையும் கைது செய்துள்ள போலீசார், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags : #CHENNAI #SEXUALASSULT