ஓவர் 'சீன்' ஒடம்புக்கு ஆகாது.. யாருக்குனு நீங்களே 'பாத்து' தெரிஞ்சிக்கங்க.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 28, 2019 09:56 PM

ஓவர் கான்பிடண்ட் உடம்புக்கு ஆகாது என சொல்வார்கள். அது எந்தளவு உண்மை என்பதை இந்த வீடியோ பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

Kabaddi Ride video goes viral on Social Media, Watch here!

கபடி போட்டி நடைபெறுகிறது. எதிரணி வீரர் உள்ளே ரைடு வந்து செல்கிறார். சென்றவர் தன்னுடைய எல்லைக்குள் செல்லாமல் எதிரணி வீரர்களை பார்த்து ஒரு கெத்து லுக் விடுகிறார். ஆஜானுபாகுவான உடற்கட்டு கொண்டவர் என்பதால் தன்னை என்ன செய்ய முடியும்? என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

அதே நேரம் எதிரணியில் இருந்து ஒரு சின்ன பையன் அவரை நோக்கி வருகிறார். வந்தவர் அவரை நேராக கட்டிப்பிடித்து தூக்க சட்டென அவரது அணி வீரர்கள் வந்து உதவுகின்றனர். அப்புறம் என்ன? ஈசியாக அவரை தூக்கிப்பிடித்து அவுட் ஆக்கி விடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #TWITTER