WATCH VIDEO: 'எறங்கி' வந்து அடிச்சதெல்லாம் சரி.. ஆனா திரும்பவும் 'உள்ள' போகணும்.. நெட்டிசன்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 31, 2019 07:58 PM

தியோதர் டிராபி போட்டியில் ஜெயதேவ் உனத்கட்டின் அவுட்டை கிரிக்கெட் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

Jaydev Unadkat Gets Run-Out After Forgetting To Get Back Inside The Cr

ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ ஸ்டேடியத்தில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய பி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஏ அணி 48 ஓவர்களில் 194 ரன்களுக்கு சுருண்டது.

ஏ அணி பேட்டிங் செய்தபோது 43-வது ஓவரின் 5 வது பந்தில் ஜெயதேவ் உனத்கட் அவுட் ஆனார். அந்த ஓவரை ஷாபாஸ் நதீம் வீசினார். பந்தை இறங்கி வந்து உனத்கட் அடிக்க முயன்றார். பேட்டில் பட்ட பந்து வேகமாக செல்லவில்லை. இதனால் மெத்தனமாக உனத்கட் கிரீஸை நோக்கி நடந்தார்.

ஆனால் பந்தை கலெக்ட் செய்த பீல்டர் சரியாக விக்கெட் கீப்பரிடம் பந்தை வீச அவர் உடனடியாக பெயில்ஸை தட்டிவிட்டு உனத்கட்டை அவுட் ஆக்கினார். 7 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த உனத்கட் இதனை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவர் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #IPL