‘சாக்கடை குழிக்குள் சிக்கிய சிறுவன்’! ‘மீட்க சென்ற வீரர்களை மண் மூடிய பரிதாபம்’! நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Dec 02, 2019 10:13 AM
புனேயில் கால்வாயில் சிக்கிய சிறுவனை மீட்க முயன்றபோது தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாடா (Pimpri Chinchwad) என்ற பகுதியில் உள்ள சாக்கடைக் குழியில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். உடனே குழி தோண்டப்பட்டு 4 தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து வீரர்களின் மீது விழுந்துள்ளது.
இதில் நான்கு தீயணைப்பு வீரர்களும் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர், மண்ணுக்குள் சிக்கியிருந்த வீரர்களை மீட்டுள்ளனர். இதில் விஷால் ஜாதவ் என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Maharashtra: Five people, including two fire brigade personnel trapped in a hole, that was dug for a drainage line in Dapodi area of Pune. pic.twitter.com/DgBP0cas3T
— ANI (@ANI) December 1, 2019