இப்படியும் ஒரு தாயா?..மகன் பலாத்காரம் செய்ததை 'வீடியோ' எடுத்து ரூ.4 லட்சம் காசு பறிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 20, 2019 02:22 PM

பெற்ற மகன் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து,இளம்பெண்ணிடம் அவரது அம்மா பணம் கேட்டு மிரட்டி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Women Drugged and Raped accused\'s mother records video

முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால்,எங்கு என்ன குற்றம் நடந்தாலும் உடனுக்கு உடன் அது அனைவருக்கும் தெரிய வந்து விடுகிறது.இதனால் கொலை,கொள்ளை,கடத்தல் என எதுவாகினும் அதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர்.இணையத்தின் அசுர வளர்ச்சியில் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மை உள்ளதோ,அவ்வளவுக்கு தீமைகளும் கலந்துகட்டி சரிசமமாக உள்ளது.

அந்த வகையில் பெற்ற தாயே மகன் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.19 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பது போல நடித்து இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞரின் தாய் அந்த பெண்ணுக்கு இனிப்புகள் கொடுத்து உபசரித்துள்ளார்.அந்த இனிப்பில் மயக்க மருந்து இருந்ததை அறியாமல் அந்த பெண் சாப்பிட்டு மயங்கி விட்டார்.தொடர்ந்து அந்த பெண்ணை இளைஞர் பலாத்காரம் செய்ய,இதனை அவரது அம்மா வீடியோ எடுத்து எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்ணிடம் அந்த இளைஞரின் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டில் நிலம் விற்று வைத்திருந்த ரூபாய் 4 லட்சத்தை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்து விட்டார்.வீட்டில் அந்த பெண்ணின் தந்தை பணம் குறித்து கேட்கும்போது நடந்த சம்பவம் அனைத்தையும் அழுது கொண்டே அந்த பெண் தந்தையிடம் கூற,பொறுக்க முடியாத தந்தை அந்த கும்பல் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

தற்போது போலீசார் அவர்களைக் கைதுசெய்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #RAPE #CHHATTISGARH