'சினிமாவையே மிஞ்சிட்டீங்க'...' சென்னை'யில் மாணவர்கள் செய்த அட்டூழியம்' ... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 21, 2019 09:59 AM

சென்னையில் பஸ் டே என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்த களோபரங்கள் ஓய்வதற்குள்,நடு ரோட்டில் பள்ளி மாணவர்கள் கட்டி புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai School students fight in KK Nagar Bus stop

சென்னை கே.கே நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பலர் கும்பலாக நின்று கொண்டிருந்தார்கள்.அப்போது இரண்டு மாணவர்கள் பயங்கரமாக கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டார்கள்.அதில் ஒரு மாணவன் பள்ளி சீருடையிலும்,மற்றோரு மாணவன் சட்டை அணியாமலும் இருந்துள்ளான்.அங்கு கூடியிருந்த மாணவர்கள் யாரும் சண்டையை விலகி விடாமல்,கோசம் போட்டு சண்டையை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

அப்போது பயணி ஒருவர் சண்டையை விலக்கி விட முயற்சித்த போது,அதனை சக மாணவர்கள் தடுக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையே இது போன்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மாணவர்களுக்கு,எந்தவித இரக்கமும் காட்டாமல் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : #SCHOOLSTUDENT #CHENNAI #FIGHT #KKNAGAR #SCHOOL BOYS