‘துப்பாக்கியோடு வந்த ஒருவன்.. வகுப்புலயே துப்பாக்கியுடன் இருந்த இன்னொருவன்’.. அலறித்துடித்த பள்ளி சிறுவர்கள்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 08, 2019 02:20 PM

படிக்கும் பள்ளியிலேயே 2 மாணவர்கள் சக மாணவர்களை தாக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Colorado: 2 students kills A student using gun, 7 wounded

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாகாணம், ஹைலேண்ட் ரான்ச் பகுதியில் உள்ள  ஸ்டெம் எனும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில், மதிய வேளையில் 18 வயதைத் தாண்டிய மாணவர் ஒருவர், மற்ற மாணவர்கள் இருக்கும் வகுப்பறை ஒன்றுக்குள் ஒரு கிதார் பையுடன் நுழைந்துள்ளான்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கிதார் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சக மாணவர்களை நோக்கி, திடீரென அந்த மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதை வகுப்பறையில் இருந்தபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு மாணவன் (18 வயதுக்கும் குறைவானவர்) தன் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து சக மாணவர்களை நோக்கி நடத்தியதால் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் கொலைநடுங்கியது. பதற்றத்திலும் பயத்திலும் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி பேசிய போலீஸார், இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 18 வயதுடைய ஒரு மாணவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பிரிவுகள் உள்ள இப்பள்ளியில் உயர்நிலைப் பள்ளி வகுப்பறையில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பள்ளி முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மற்ற மாணவர்கள் உடனடியாக பெற்றோர்களை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது பல பேற்றோர்களிடம், அழுதுகொண்டே தாங்கள் பார்த்த கோரமான சம்பவத்தை மாணவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட பெற்றோர்கள், இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததால், பள்ளி நிர்வாகத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #BIZARRE #SA #GUNSHOT #CRIME