'இந்த 'வீடியோ'வ பாத்த யாரு தான் அழமாட்டாங்க'... 'பலரையும் நெகிழ வைத்த'... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 21, 2019 12:17 PM

மாற்றுத்திறனாளியான தனது நண்பனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு, தானும் உணவருந்தும் வீடியோ பலரையும் நெகிழ வைத்துள்ளது.

School boy feeding his differenly-abled friend video wins hearts

சமீபத்தில் சீனாவில் 12 வயது சிறுவன் ஒருவன், தனது மாற்றுத்திறனாளி நண்பனை பள்ளிக்கு சுமந்து செல்லும் காட்சிகள் பலரையும் நெகிழ வைத்தது.அந்த வீடியோ வெளியாகி உலக அளவில் பலரது பாராட்டையும் பெற்றது.அதே போன்ற ஒரு சம்பவம் தற்போது இந்தியாவில் நடந்துள்ளது. அனிதா சௌகான் என்பவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மாணவன் தானும் உணவருந்திக் கொண்டு, அருகில் அமர்ந்திருக்கும் தனது மாற்றுத்திறனாளி நண்பனுக்கும் உணவை ஊட்டி கொண்டிருக்கிறான்.இந்த காட்சிகள் காண்போரை கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்த வீடியோவை பகிர்ந்துள பலரும் அந்த மாணவனை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Tags : #SCHOOLSTUDENT #TWITTER #SCHOOL BOY #DIFFERENLY ABLED #FEEDING