'ஆட்டோ ஓட்டுநரால்'... கல்லூரி 'மாணவி'க்கு நேர்ந்த பரிதாபம்... பரிதவித்துப் போன 'பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 15, 2019 03:20 PM

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று, இளைஞர் ஒருவர் 5 நாட்களாக பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 year old college student kidnapped and abused by auto driver

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர், 17 வயதான கல்லூரி மாணவி ஒருவர். கடந்த 10-ம் தேதி, கல்லூரிக்கு சென்ற இவர், பின்னர் காணாமல் போனார். வீடு திரும்பாததால், பதறிப்போன பெற்றோர், அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால் எங்கும் கிடைக்காததால், பின்னர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில், விசாரணையில் இறங்கிய போலீசார், அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ்குமார் என்ற இளைஞர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரமேஷ்குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும்அவர் கடத்திச் சென்ற மாணவியையும் போலீசார் மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். விசாரணையில் மாணவியை கடத்திச் சென்று 5 நாட்களாக பாலியல் தொல்லை அளித்து தெரியவந்ததை அடுத்து, ரமேஷ்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SALEM #OMALUR #KIDNAPPED #TORTURED #ABUSED