மழையால் இந்தியாவுக்கு பாதிப்பா?.. மீண்டும் ஆட்டம் காட்டிய மழை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 16, 2019 07:22 PM

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

World Cup 2019: Rain stops play after 46.4 overs of India innings

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விளையாடததால், அவருக்கு கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இதில் ராகுல் 57 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த விராட் கோலியுடன், ரோஹித் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதில் 140 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாரதவிதமாக ரோஹித் ஷர்மா அவுட்டாகினார். இதனை அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 26 ரன்களில் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய தோனி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து 77 ரன்களில் கோலியும் அவுட்டாக, கடைசியாக 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. ஆனால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 166 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில் திடீரென மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #KLRAHUL #MSDHONI #HARDIKPANDYA #ROHITSHARMA #INDVPAK #TEAMINDIA