‘இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்..’ பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 16, 2019 07:10 PM
சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஒருவரை ஆட்டோவில் வந்த சிலர் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த சிலர் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டியுள்ளனர். பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கவலைக்கிடமான நிலையில் இருந்த தினேஷ்குமாரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தலையில் அதிகமாக வெட்டுக்காயங்கள் இருந்ததால் பின்னர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதை வைத்து ஆட்டோவில் வந்து தாக்கிய நபர்கள் மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நாகமணி என போலீஸார் அடையாளம் கண்டு அவர்களைத் தேடி வருகின்றனர். இது முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவமா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
