'இதுக்குன்னு ஒரு அவார்டு கொடுக்கணும்னா'.. அது இந்த டீம்க்குதான் தரணும்.. ஐசிசியின் வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 15, 2019 08:48 PM

ஐசிசி கிரிக்கெட் போட்டி, தொடங்கி உலகம் முழுவதும் பிரம்மாண்டமான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புகளைப் பெற்றுக்கொண்டு வரும் நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Afghanistan cricket team making fun video goes viral

வரும் ஞாயிறுக் கிழமை அன்று 16.06.2019 இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், உலகக்கோப்பை தொடரில்,  இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் இந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 -ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது. முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் திறமையைப் பாராட்டிய சச்சின், அவர்கள் எதிர்பாராத ஆச்சரியத்தைத் தர வல்லவர்கள் என்றும் கமெண்ட்ரி பகுதியில் பேசியிருந்தார்.

இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விளையாட்டாக டான்ஸ் ஆடிக்கொண்டு ரகளை செய்துகொண்டிருந்த சுவாரஸ்யமான வீடியோ ஒன்று வெளியானது. ஐசிசி வெளியிட்ட அந்த வீடியோவில், சிறந்த கொண்டாட்டம் நிறைந்த அணிக்கு அவார்டு தர வேண்டும் என்றால், அந்த விருதை ஆப்கானிஸ்தான் அணிக்குத்தான் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.