‘உலகக்கோப்பை என் கையில இருக்கணும்’ ‘இதுக்காக 3 வருஷம் காத்திருக்கேன்’.. இந்திய வீரர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 14, 2019 03:38 PM

உலகக்கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை கையில் ஏந்த ஆர்வமாக இருப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

World cup 2019: Hardik Pandya wants to lift the World Cup trophy

இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைபட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை(16.06.20190 நடைபெற உள்ள போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. இதனால் வருயிருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘ஜூலை 14 -ம் தேதி என் கையில் உலகக்கோப்பை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இப்போதைக்கு இதுமட்டும்தான் என்னுடைய குறிக்கோள். நான் ஒரு ஜாலியான ஆள். என்ன நடந்தாலும் சந்தோஷமாக இருப்பதுதான் பிடிக்கும்’ என பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #HARDIKPANDYA #TEAMINDIA