‘மேட்ச் நடக்காதது நல்லதா போச்சு ’.. எதுக்காக கோலி இப்டி சொன்னாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 13, 2019 10:41 PM

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

We are not too worried about where we stand, Says Virat Kohli

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிக்களுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டி ரத்து செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதனால் கடுப்பான ரசிகர்கள் தங்களை ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் மீம்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மழையால் போட்டி நடைபெறாமல் போனது குறித்து விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘போட்டி நடைபெறாமல் போனதால் எங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லை. மழையால் மைதானம் இன்று இருக்கும் நிலைமையில் விளையாடினால் வீரர்களுக்கு தேவையில்லாமல் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விளையாடாமல் இருந்தது ஒருவகையில் நல்லதுதான். புள்ளிப்பட்டியல் பற்றி யோசிக்கவில்லை. விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது நம்பிக்கை அளிக்கிறது’ என கோலி தெரிவித்துள்ளார்.