'இந்திய அணியில் அதிரடி மாற்றம்?'... 'மிடில் ஆர்டரில் யாருக்கு வாய்ப்பு?'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 16, 2019 12:37 PM
இந்தியா - பாகிஸ்தான் மோதும் இன்றையப் போட்டியில், கடைசி நேரத்தில் அணியில் சிறிய மாற்றம் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி, இன்று பிற்பகல் 3 மணிக்கு, மான்செஸ்டரில், ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில், இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஆறிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று வரலாற்றை தொடர இந்திய அணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் அணியும் தீவிரம் காட்டும். இந்நிலையில், இந்திய அணியில் காயம் காரணமாக ஷிகார் தவான் விலகலால், கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார். அத்துடன் 4-வது இடத்தில் தமிழக வீரர்களான விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இவர்களில் யாரேனும் ஒருவர் களமிறக்கப்படவாய்ப்புள்ளது.
போட்டி தொடங்க உள்ள முதல் இரண்டு மணிநேரத்தில், மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் போட்டி தடைப்பட்டால், ஓவர்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்போது தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தப்படலாம். ஆனால் விஜய் சங்கரை தேர்வு செய்தால், பவுலிங்கிற்கு கூடுதலாக ஒரு வீரர் கிடைப்பார் என்பதால் அவரே தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. அதே போல சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் தொடர்ந்து சொதப்பி வருவதால், ரவிந்திர ஜடேஜா அணியில் தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.