‘இது ஒன்னு போது நீங்க யார்னு சொல்ல’.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 13, 2019 11:32 PM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின் ஆஸ்திரேலிய ரசிகருக்கு வார்னர் கொடுத்த பரிசு இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Warner gives his Man of the match award to young Australia fan

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்றின் 17 -வது போட்டி நேற்று கௌண்டி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களை எடுத்தது.  இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 107 ரன்களும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அரோன் ஃபின்ஞ் 82 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் 45.4 ஓவர்களில் 266 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமத் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு வீணாக ரன் அவுட்டில் வெளியேறினார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் அதிர்ப்தி ஏற்படுத்தியது.

இந்நிலையில் 107 ரன்கள் அடித்து வெற்றிபெற காரணமாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது வழங்கப்பட்டது. இதனை போட்டியை காண வந்திருந்த தன்னுடைய ரசிகரான ஆஸ்திரேலிய சிறுவனுக்கு  வார்னர் பரிசாக கொடுத்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.