‘இதுக்காக எல்லாம் கெஞ்சிட்டு இருக்க முடியாது’.. மீண்டும் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 14, 2019 06:43 PM

தங்களது நாட்டுடன் விளையாடுமாறு எந்த நாட்டிடமும் கெஞ்சக்கொண்டு இருக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

We don\'t need to make gestures, Says PCB Chief

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று வருகிற ஞாயிற்றுக்கிமை(16.06.2019) ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 8 -வது இடத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தானை பொறுத்தவரை எல்லை ரீதியான பிரச்சனைகள் நிலவி வருவதால் இரு நாட்டு போட்டியை காண உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் ஆர்வத்தோடு உள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் இரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்கப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷன் மணி, ‘எங்கள் அணியுடன் விளையாடுமாறு இந்தியா உட்பட எந்த ஒரு அணியுடனும் கெஞ்சிக்கொண்டு இருக்க முடியாது. சுமூகமான முறையிலேயே இரு நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #INDVPAK