தவான் திரும்ப வருவாரா? மாட்டாரா?.. விராட் கோலி சொன்ன சூசகமான பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 14, 2019 12:20 PM
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்வது குறித்து விராட் கோலி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் சுற்று நேற்று மழையால் ரத்து செய்யப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் மைதானம் அதிகப்படியான ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் டாஸ் போடுவதற்கு முன்பே போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதனை அடுத்து போட்டி நின்றது தொடர்பாக பேசிய விராட் கோலி, போட்டி ரத்து செய்யப்பட்டது நல்லதுதான் என தெரிவித்தார். தற்போது மைதானம் இருக்கும் சூழ்நிலையில் விளையாடினால் வீரர்களுக்குதான் தேவையில்லாமல் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தவான் அணிக்கு திரும்புவது குறித்து பேசிய கோலி,‘தவான் தற்போது கையில் கட்டு போட்டுள்ளார். இதனால் இரு வாரங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவை. காயம் சரியானதும் தொடரின் பின் பகுதியில் நடைபெறும் போட்டிகள் மற்றும் அரையிறுதியில் தவான் விளையாட வாய்ப்பு உள்ளது. தவான் உத்வேகத்துடன் இருப்பதால் அவரை அணியில் வைத்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம்’ என கோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(16.06.2019) இந்திய அணி தனது அடுத்து போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
