'சென்னை ரசிகர்கள் ஏம்ப்பா பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்றீங்க?'... 'தடாலடி' பதிலளித்த சி.எஸ்.கே. அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 13, 2019 05:34 PM

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு, சென்னை ரசிகர்கள் ஏன் ஆதரவு தருகின்றனர் என்ற ரசிகரின் கேள்விக்கு, சி.எஸ்.கே. அனி நிர்வாகம் பதிலளித்துள்ளது.

csk tweets for chennai ipl fans in pakistan vs australia match

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், தங்களது அணி வீரர்களை உற்சாகப்படுத்த, அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் குவிவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமையன்று டான்டன் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி வீரரான வாஹப் ரியாஸ், மிட்சேல் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்திருந்த ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்த இந்திய ரசிகர் ஒருவர், உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு, சென்னை ஐபிஎல் ரசிகர்கள் ஆதரவு அளிப்பது ஏன் என புரியவில்லை என கேள்வி எழுப்பி பதிவு செய்திருந்தார். இதற்கு சி.எஸ்.கே அணி நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதில் மைதானத்தில் இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களாக இருக்கலாம் என கூறியுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது.