'இங்கே வராதே, அங்கே போ!... இந்திய வீரரின் கெஞ்சல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 14, 2019 11:18 AM

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதயிருந்த உலகக் கோப்பை போட்டியில், கேதர் ஜாதவ் இந்தியாவுக்காக வேண்டிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Kedar Jadhav asks Nottingham rain to go to Maharashtra

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்ஹாமில் கடந்த வியாழக்கிழமையன்று நடக்கயிருந்த, 18-வது லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதயிருந்தன. போட்டி நடக்கும் நாட்டிங்ஹாமில், கடந்த திங்கள்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் எதிர்பார்த்தது போலவே, மழை பெய்ததால் டாஸ் போடாமலேயே ஆட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே மழை லேசாக நின்ற போது, இந்திய கிரிக்கெட் அணி வீரரான கேதர் ஜாதவ், வேண்டிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், 'மழையே போ, போ... தண்ணீர் பஞ்சம் நிலவும், இந்தியாவில் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு செல்லும் படி, மாராத்தியில் கேட்டுக்கொண்டார். நாட்டிங்ஹாமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக, அங்கு போ' என தெரிவித்துள்ளார்.