‘டாஸ் கூட போடாம ரத்தான போட்டி’.. மழையால் இந்தியாவுக்கு வந்த புதிய சிக்கல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 13, 2019 09:06 PM

இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

IND vs NZ: Match abandoned due to rain

உலகக்கோப்பை லீக் சுற்றின் 18 -வது போட்டி இன்று நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகள் மோதயிருந்தன. டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி சுமார் 75 நிமிடங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் போட்டி நடத்தும் நிலைமையை மைதானம் இழந்தது. இதனால் டாஸ் போடுவதற்கு முன்பே போட்டி கைவிடப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டி ரத்தாவது இது மூன்றாவது முறையாகும். இதுபோல் அடுக்கடி மழையால் போட்டி ரத்து ஆவதால் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி நிலவி வருகிறது.

இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் நியூஸிலாந்து அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இனிவரும் வரும் போட்டிகளில் 2 -ல் வெற்றி பெற்றாலே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆனால் இந்திய அணி இனிவரும் போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் 2 புள்ளிகள் கிடைத்திருக்கும். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் மனதளவில் நம்பிக்கையுடன் விளையாடும். ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டி ரத்தானதால் இந்திய அணிக்கு சற்று பாரம் அதிகமாகியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #INDVNZ