'மழையால் நின்ற மேட்ச்.. ஆனாலும் தோனி கொடுத்த சர்ப்ரைஸ்'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 14, 2019 06:08 PM

உலகக் கோப்பை தொடரின் 18 -வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவிருந்தது.  ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டி தற்போது மழையால் ரத்து செய்யப்பட்டது.

MS Dhoni Waving Towards Fans After INDvNZ Match Abandoned Due To Rain

இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் நியூஸிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது. இந்திய அணியும், தான் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது.

இதனை அடுத்து வரும் ஞாற்றுக்கிழமை(16.06.2019) இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடரில், இந்த இரு அணிகளும் சந்திக்கும் முதல் போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடை பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 -ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனாலும் முன்னதாக நடந்து முடிந்த மினி உலகக்கோப்பை என சொல்லப்படும் சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றியது. அதனால் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால், இந்திய வீரர்களின் ஆட்டத்தைக் காணவந்த ரசிகர்களுக்கு அது, பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 

ஆனாலும் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த தோனி, அறையை விட்டு வெளியே வந்து, அனைவரையும் பார்த்து, அடுத்த போட்டியில் சந்திப்போம் என்கிற வகையில் கையசைத்துச் சென்றார். தோனியைப் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்த வீடியோ வைரலாகி வருகிறது.