'10 பேர அடிச்சு 'டான்' ஆகல'...'நான் அடிச்ச 10 பேருமே 'டான்' தான் டா'...புதிய வரலாறு படைத்த 'தல'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 12, 2019 10:31 AM

தனது ஐபிஎல் வாழ்க்கையில் நேற்று புதிய சாதனையை படைத்து அசத்தினார்,தல என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி.

MS Dhoni is now the first captain to win 100 matches in IPL History

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில்  ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் ‘பீல்டிங்யை’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (23), ஸ்டோக்ஸ் (28) ஆகியோர் கைகொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அதிரடியாக ஆடக் கூடிய வாட்சன் சொதப்பலான துவக்கத்தை அளித்து வெளியேறினார்.இதையடுத்து களமிறங்கிய டுபிளசி (7), ரெய்னா (4) ஆகியோர் விரைவாக வெளியேற சென்னை ரசிகர்கள்அதிர்ச்சி அடைந்தார்கள்.பின்னர் களமிறங்கிய சென்னை கேப்டன் தோனி, ராயுடு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்கள்.இதையடுத்து ராயுடு (57) அரைசதம் அடித்து வெளியேறினார்.கடைசி வரை தனியாளாக களத்தில் நின்ற தோனி 58 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த சாண்டனர் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க,சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதோடு சென்னை அணியின் 'கேப்டன் தோனி' புதிய சாதனை ஒன்றையும் தனதாக்கினார்.நேற்றைய போட்டியின் வெற்றி மூலம்,'ஐபிஎல்' அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் தோனி.இதனை சென்னை ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.