'பேபி சிட்டர்' யாருன்னு உலககோப்பையில காட்டுறோம்'...கம்பிரமாக வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 15, 2019 10:06 AM

இங்கிலாந்தில் மே மாதம் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அணியினை அறிவிப்பதில் ஒவ்வொரு நாடும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  ஆஸ்திரேலிய அணிகான வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

Australia’s World Cup squad has been announced

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடம் இருந்த மில்லியன் டாலர் கேள்வியே ''தடையில் இருக்கும் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்குத் திரும்புவார்களா'' என்பது தான்.அதற்கு தற்போது விடையும் கிடைத்து விட்டது.இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ட்ரேவோர் ஹோன்ஸ்,  ``டேவிட் வார்னர், மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புகின்றனர்.இது எங்களது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே இவர்கள் இருவரின் வருகையால், இந்தியத் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் ஹேண்ட்ஸ்கோம்ப், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை.மேலும் உஸ்மான் கவாஜா இடம் பெற்றிருப்பது அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.நடுவரிசையில் ஷான் மார்ஷ், மேக்ஸ்வல் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை, பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப் ஆகிய ஐவர் படை வேகப்பந்துவீச்சையும், நாதன் லயன் மற்றும் ஆடம் சம்பா சுழற்பந்து வீச்சையும் கவனித்துக் கொள்ளவுள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

பின்ச் (கேப்டன்), வார்னர், ஸ்மித், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப்,  நாதன் லயன், ஆடம் சம்பா

இதனிடையே ஆஸ்திரேலிய அணியினை பேபி சிட்டர் என கிண்டலடித்து சேவாக் நடித்த விளம்பரம் ஆஸ்திரேலிய ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.இந்நிலையில் தடையில் இருந்த வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு திரும்பியிருப்பது மூலம்,பேபி சிட்டர் யாரென்று உலககோப்பையில் காட்டுகிறோம் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #AUSTRALIAN-BALL-TAMPERING-CONTROVERSY-2018 #DAVIDWARNER #CRICKET #STEVE SMITH #2019 WORLD CUP #AUSTRALIA’S WORLD CUP SQUAD