'இவரை டீம்ல எடுக்காதது ரொம்ப சில்லியா இருக்கு'...'மிடில் ஆர்டரில்' இவர் கண்டிப்பா வேணும்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 13, 2019 10:27 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நெருங்கும் நிலையில்,வீரர்கள் தேர்வு குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஜாக் காலிஸ்,கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது.அதற்கான வீரர்களை இறுதி செய்யும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதனிடையே உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
உலகக்கோப்பைக்கான வீரர்களின் பட்டியல் கிட்டத்தட்ட உறுதியான நிலையில்,4 வது இடத்தில் களமிறங்கும் வீரரைத் தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.அந்த இடத்திற்கு ராயுடு உட்பட பல வீரர்களை மாற்றி பார்த்தும் தேர்வு குழுவிற்கு இன்னும் முழுமையான நிறைவு கிடைக்கவில்லை. இதனிடையே தற்போதுள்ள இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நிச்சயமாக சேர்க்கப்பட வேண்டிய வீரர் என முன்னாள் ஆல் ரவுண்டரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஜாக் காலிஸ்,கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில் 'உலகக்கோப்பைக்கான அணியில் நிச்சயம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை.இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாடும்போது அந்த மைதானத்தின் பிச் தன்மை குறித்து அறிந்து விளையாட அனுபவம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.தினேஷ் கார்த்திகை சேர்க்கவில்லை என்றால் இந்திய அணிக்கு தான் இழப்பு.நான் தேர்வாளராக இருந்தால் நிச்சயம் அவரை சேர்ப்பேன்' என ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.