'தவான் இல்லாதது, இந்தியாவுக்கு பெரிய இழப்புதான்'.. 'சீண்டிய நியூசிலாந்து வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 13, 2019 12:23 PM

ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு என்று ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

Ross Taylor says Dhawan\'s absence due to injury a big loss for India

இந்தியா, நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் புதன்கிழமையன்று நியூசிலாந்து அணி வீரரான  ராஸ் டெய்லர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது 'உலகக் கோப்பை தொடரில் இன்னும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. அதனால் 9 அணிகளுக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. தற்போதைக்கு முதல் 4 இடங்களைப் பெற 7 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடமோ அல்லது 4-வது இடமோ முதலில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதான் முக்கியம்.

அதன்பின்னர், அந்த 2 வெற்றிகளைப் பெற்றுவிட்டால் கோப்பையை வெல்வது நிச்சயம். இந்திய அணி எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாடக் கூடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்திறன் கொண்டவர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் ரோஹித், தவான் ஜோடி நல்ல புரிந்துணர்வுடன் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஷிகர் தவான்  அணியில் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பேரிழப்பாக அமையும்' என்று தெரிவித்துள்ளார்.