'தவான்' இடத்தில் 'தமிழக வீரர்கள்'...கவலைப்படாதீங்க நாம 'கெத்து காட்டலாம்'...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 13, 2019 12:23 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய தொடர்,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தவான் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tough Decisions Ahead Of Shikhar Dhawan Less India

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,தனது தொடக்க ஆட்டங்களில் பலம் வாய்ந்த தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வென்று அசத்தியது.இந்திய அணிக்கு பேட்டிங் வரிசை மிகவும் பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.ஹிட் மேன்  ரோகித் ஷர்மாவுடன், கேப்டன் விராட் கோலி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமே.இவர்கள் இருவரும் களத்தில் நின்று விட்டால்,இருவரின் ரன் வேட்டையை தடுப்பது மிகவும் கடினம்.

அதே போன்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும்  நடுகள வரிசையில் இருக்கும் கேதர் ஜாதவும், தோனியும் இந்திய அணிக்கு பெரும் தூண்களாகும். இதனிடையே அதிரடி வீரர் தவான் இல்லாதது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும், அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அல்லது விஜய்‌ சங்கர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.இதனால் நியூசிலாந்து அணி உற்சாகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WORLDCUPINENGLAND #DINESHKARTHIK #IND VS NZ #VIJAY SHANKAR #SHIKHAR DHAWAN