'16 வருஷத்திற்குப் பிறகு களம் காணும் இந்தியா'... 'ஹாட்ரிக் சாதனை படைப்பாரா கோலி?'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 13, 2019 11:00 AM

உலகக் கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துடன், இந்தியா மோதவுள்ளதால், ரசிகர்களிடையே இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

India look to equal World Cup record vs New Zealand

உலகக் கோப்பை தொடரில் நாட்டிங்ஹாம், டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும், வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிளும், இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில், இந்தியா 3 ஆட்டங்களிலும், நியூசிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. கடைசியாக இந்த இரு அணிகளும் 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வென்றது. அதன்பிறகு 2007, 2011, 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டதில்லை.

மேலும், உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இங்கிலாந்து மண்ணில் 3 முறை மோதியுள்ளன. இதில், நியூசிலாந்து அணியே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 179 ரன்னுக்கு சுருட்டி வெற்றிக் கண்டது. அந்த நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் காண உள்ளது. இதனால் 16 ஆண்டுகளுக்குப்பின் இப்போட்டியில் நேரடியாக மோத உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.