‘ஸ்பாட் ஃபிக்சிங்’.. ‘ரூம்ல வைச்சு கன்னத்தில பளார்னு ஒரு அடி’.. வெளியான பாகிஸ்தான் வீரர் ரகசியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 13, 2019 05:08 PM
பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்ட ரகசியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்களான முகமது அமீர் மற்றும் சல்மான் பட் ஆகிய இருவரும் கடந்த 2011 -ம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும் போது ஸ்பாட் ஃபிங்சிங்கில் ஈடுப்பட்டனர். இதனை உறுதி செய்த ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு இவர்களுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இதில் விசாரணைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாலும், குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும் முகமது அமீர் மீதான தடை தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் முகமது அமீர் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். அதில்,‘அப்போது கேப்டனாக இருந்த அப்ரிடிதான் ஸ்பாட் ஃபிக்சிங் தொடர்பாக முகமது அமீரிடம் விசாரித்தார். அந்த சமயம் நானும் அதே அறையில்தான் இருந்தேன். பின்னர் சிறுதுநேரம் அப்ரிடி என்னை வெளியே நிற்க சொன்னார். நான் வெளியே வந்ததும் கன்னத்தில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதன்பின்னர்தான் முகம்து அமீர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், ‘இந்த பிரச்சனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே தீர்த்து வைத்திருக்காலாம். ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர் மற்றும் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்திருக்காலம். ஆனால் தேவையில்லாம் ஐசிசி வரை சென்று பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இமேஜ்-யை கெடுத்துவிட்டது’ என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.