'அவர் பொண்ணு இறந்து போச்சு'... 'அவரை ஒண்ணும் சொல்லாதீங்க'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jun 13, 2019 03:54 PM
கிரிக்கெட் உலகத்தை சமீபத்தில் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு,பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்று நோயினால் இறந்தது.இதனிடையே நேற்றைய போட்டியில் இரண்டு முக்கியமான கேட்ச்களை அவர் தவற விட்ட போதும், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரை கடிந்து கொள்ளாதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுடனான நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 307 ரன்களை குவித்தது.ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஆசிப் அலி தவற விட்ட அந்த இரண்டு முக்கிய கேட்ச்கள் தான். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் கேட்ச்களை தான் ஆசிப் அலி தவற விட்டார்.இது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு அதிர்ஷ்டமாக மாறி போனது.
இதனிடையே ஆசிப் அலி கேட்ச்களை தவறவிட்ட போது,அவருக்கு பின்னல் போட்டியை ரசித்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர்,கலவையான உணர்வை வெளிப்படுத்தினார்.அவரது ஏமாற்றம் அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து ரசிகரின் ரியாக்ஷன் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டது. இதனால் அந்த ரசிகர் வைரலானார்.இதையடுத்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி பலரையும் நெகிழ செய்துள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில் ''அது மிகவும் நேர்த்தியான கேட்ச்.எனக்கு முன்னால் நடப்பதை பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது.அவர் கையில் விழுந்த பந்தை அவர் நழுவவிட்டு விட்டார்.இது எனக்கு பெரிய ஏமாற்றம் தான்.ஆனால் நான் ஆசிப் அலியை ஒன்றும் சொல்லவில்லை.காரணம் இப்பொது தான் ஆசிப், தனது மகளை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்டு விளையாட வந்திருக்கிறார்.எனவே நான் மனித தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
(•_•)
— ICC (@ICC) June 12, 2019
<) )>
/ \#WeHaveWeWill#CWC19 pic.twitter.com/gkDwE2MMji
(•_•)
— ICC (@ICC) June 12, 2019
<) )>
/ \#WeHaveWeWill#CWC19 pic.twitter.com/gkDwE2MMji