என்ன பண்றீங்க ஜாம்பா? பந்துவீசும் முன் ஆஸ்திரேலிய வீரர் செய்த செயல்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 09, 2019 07:26 PM

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் செய்த செயல் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

WATCH: Zampa tampered with ball during IND vs AUS match

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று(09.06.2019) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரோகித் ஷர்மா 57 ரன்களும், ஷிகர் தவான் 117 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 48 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸின் ஓவரில் ஆரோன் ஃபின்ஞ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தோனி 27 ரன்களிலும், விராட் கோலி 82 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். கடைசியாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 3 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்ட்ரி விளாசி 11 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை இந்தியா எடுத்தது.

இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீசிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பா சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மைதானத்திற்குள் நடந்துகொண்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags : #ICCWORLDCUP2019 #INDVAUS #CWC19 #ZAMPA