'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல'...'தோனி'க்கு எதிராக...திட்டம் போட்ட 'பாகிஸ்தான்'... பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jun 08, 2019 03:36 PM

இந்தியாவிற்கு எதிரான போட்டியில்,இந்திய வீரர்களின் அவுட் ஆகும் போது,எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர்கள் போட்டிருந்த திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

cricketers to only stick to cricket during IND vs PAK match

சவுதாம்ப்டன் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை பதித்த கையுறைகளை அணிந்திருந்தார். இதற்கு சமூகவலைத் தளங்களில் பலர் ஆதரவுவும் வரவேற்பும் தெரிவித்தார்கள்.முன்னதாக புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செத்தும் விதமாக,கடந்த மார்ச் மாதம் இந்தியா,ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு நாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ராணுவ தொப்பியினை அணிந்து விளையாடினார்கள்.இந்த இரண்டு செயல்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர் ஃபவத் செளத்ரி, தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சர்வதேச விளையாட்டில் இது போன்ற செயல்களை அனுமதிக்க கூடாது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டிகளானது வரும் 16- ஆம் நடைபெற இருக்கிறது.அந்த போட்டியில் தோனியின் செயலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

போட்டியில் ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும் போது,வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட, அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.இதனை அறிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக அதனை மறுத்து விட்டது.வீரர்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் எனவும்,அரசியல் ரீதியாக செயல்படக் கூடாது என்று இம்ரான் கான் அறிவுறுத்தியதாக, பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.