'தோனியின் கையுறை காண்ட்ரோவர்ஸியின் முடிவு இன்று தெரியும்'.. மனம் திறந்த இந்திய வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 09, 2019 11:36 AM
4வது வரிசையில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடுவதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் தந்த பார்ட்னர்ஷிப் முக்கியமானது என்றும் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாண்ட போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், தலயுமான தோனி, பாரா மிலிட்டரியின் பாலிடன் முத்திரை அணிந்த கையுறைகளை பயன்படுத்தி விக்கெட் கீப்பிங் செய்தார்.
தோனியின் இந்த செயல் இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்களாலும், இன்னும் சில கிரிக்கெட் வீரர்களாலும் புகழப்பட்டும் பாராட்டப்பட்டும் வந்தன. இந்த நிலையில், ஐசிசி இதனை கண்டிக்கச் செய்ததோடு, அடுத்தடுத்த ஆட்டங்களில் அந்த கையுறையை மாற்றிவிட்டு, வேறு ஒரு கையுறையை பயன்படுத்தி தோனி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியது.
முன்னதாக தோனிக்கு ஆதரவாக பேசிய இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, பின்னர் ஐசிசியின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, தோனியின் கையுறையை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டது. இதுபற்றி பேசிய ரோஹித் ஷர்மா, ‘அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் இந்தியா-ஆஸ்திரேலியா மேட்சில் தோனியின் கையுறை காண்ட்ரோவெர்ஸியின் முடிவு தெரிந்துவிடும்’ என்றும் கூறியுள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்காவின் பிட்ச் எளிதாக இல்லாததால், அதில், தான் சதமடித்தது தனக்கு ஸ்பெஷலாக இருந்ததாகவும், தொடர்ந்து அதிக போட்டிகளை விளையாட மட்டுமே ஆசை என்றும், சாதனைகளைப்பற்றி தனக்கு கவலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
