‘அவங்கல ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணனும்’.. ‘இல்லனா அவ்ளோதான்’.. முன்னெச்சரிக்கை விடுத்த சச்சின்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 07, 2019 04:23 PM
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என இந்திய வீரரகளுக்கு சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பந்துவீச்சில் பும்ரா, சஹால் மற்றும் பேட்டிங்கில் ரோஹித் ஷர்மா, தோனி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடினர்.
இதனை அடுத்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை(09.06.2019) லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி உலகக்கோப்பை லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், ‘கிரிக்கெட் விளையாட ஓர் ஆண்டு தடைக்கு பின்னர் வார்னர், ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால் இந்திய வீரர்கள் மிக எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்’ என இந்திய வீரர்களுக்கு சச்சின் அட்வைஸ் செய்துள்ளார்.
