‘இந்திய வீரர்களுக்கு அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கிஃப்ட்..’ உலகக் கோப்பையில் நெகிழ்ச்சி மொமென்ட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 08, 2019 08:57 PM

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்காக இந்திய வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

schools send soil to Indian players as blessing for world cup

2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வென்றது. இந்த முறை கோலி தலைமையிலும் இந்திய அணி அதே போல வெற்றி பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்து பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ட்விட்டர் பதிவில், “விராட் கோலி கிரிக்கெட் விளையாடக் கற்றுக்கொண்ட பள்ளியின் மண் அவரை ஆசீர்வதிக்கும் வகையில் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. உங்கள் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தெரிவிக்க இந்தப் பதிவை 5 பேருக்கு ஷேர் செய்யுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலி படித்த டெல்லியிலுள்ள விஷால் பாரதி பள்ளியிலிருந்து அவருக்காக இந்தப் பரிசு அனுப்பப்பட்டுள்ளது. இதே போல, மகேந்திர சிங் தோனிக்கு ராஞ்சியிலிருந்தும், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அவர்களது சொந்த ஊர்களிலிருந்தும் அவர்கள் விளையாடிய மண் பரிசாக அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #MSDHONI #VIRATKOHLI