'என்னா அடி??'.. காட்டுப்பய சார் இந்த வார்னர்.. மைதானத்திலேயே சுருண்ட வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 09, 2019 10:46 AM

நடப்பு உலகக் கோப்பையில் வார்னர் அடித்து தூக்கிய பந்து தாக்கியதால் இந்திய வம்சாவளி வீரர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

jai kishan hit on head by warner during world practice match

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அண்மையில் தொடங்கி, ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, மிகவும் பரபரப்பான பல திருப்பங்களையும் அதிரடிகளையும் ஆச்சரியங்களையும் நாளுக்கு நாள் குறைவில்லாமல் தந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான உலகக் கோப்பை போட்டிக்காக, வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு இங்கிலாந்து வீரர் ஜெய் கிஷான் பந்து வீசினார். ஆனால் அப்போது வார்னர்  அடித்த அடியில், அந்த பந்து எகிறிச் சென்று ஜெய் கிஷானைக் கடுமையாக தாக்கியது.

இதனால் மைதானமே பரபரப்பானது, சிறிது நேரம் தனது பயிற்சியையும் வார்னர் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் ஜெய் கிஷானுக்கு பயப்படும் அளவுக்கு எதுவும் ஆகவில்லை என்று அறிந்த பிறகே, வார்னர் பயிற்சியைத் தொடர்ந்தார். இங்கிலாந்து வீரர் ஜெய் கிஷான் இந்திய வம்சாவளி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #DAVIDWARNER #JAIKISHANPLAHA