'முட்டாள்கள்'... 'கிரிக்கெட் விளையாட போனாரா'?...'இல்ல,போருக்கு போனாரா'?...'தோனி' மீது பாய்ச்சல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jun 07, 2019 02:14 PM
உலகக்கோப்பையில் விளையாட தான் தோனி இங்கிலாந்திற்கு சென்றிருக்கிறார்,போருக்கு அல்ல என பாகிஸ்தான் அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில், இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி சவுதாம்ப்டன் நகரில் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றியினை பெற்றது. இதனிடையே தோனியின் சிறு சிறு நடவடிக்கையும் வைரலாகும் நிலையில்,தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில், தோனி அணிந்திருந்த கையுறை இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது.தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது பாரா மிலிட்டரியின் பலிடான் முத்திரை பதித்த கையுறைகளை விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு, ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் பதவி கொடுத்து கௌரவிக்கப்பட்டது. அதோடு ராணுவ பிரிவில் சிறு பயிற்சியும் மேற்கொண்டார்.இதனிடையே தனது கையுறையில் பாலிடன் முத்திரையை தோனி பதித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பறை பெற்றது.அதே நேரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான, எந்தப் பிரசாரமும் இருக்க அனுமதி கிடையாது, என்பது ஐசிசி விதியாகும்.எனவே கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,பிசிசிஐ மூலமாக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் சௌத்திரி ட்விட்டரில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.''தோனி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடத்தான் சென்றுள்ளார். மகாபாரத போருக்கு அல்ல.இது போன்ற விஷயங்களை இந்திய ஊடகங்கள் விவாத பொருளாக மாற்றியுள்ளது'' என கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
