‘வைரலாகும் இங்கிலாந்து வீரரின் சதமடிக்கும் வீடியோ..’ ஆனாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க வேணாம்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 08, 2019 11:15 PM

வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சதமடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Jason Roy hits 100 knocks down umpire Joel Wilson video goes viral

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய வங்கதேசத்தால் 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக விளையாடிய இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 153 ரன்கள் எடுத்தார். இதில் ஜேசன் 100வது ரன்னை எடுக்க ஓடிய போது அம்பயர் நிற்பதைக் கவனிக்காமல் அவர் மீது மோத அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஜேசன் அம்பயரை இடித்து அவர் கீழே விழுவதும், அதற்கு இங்கிலாந்து வீரர்களின் ரியாக்‌ஷனும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

Tags : #ICCWORLDCUP2019 #ENGVBAN