இந்திய ராணுவ முத்திரை இருக்கா? இல்லையா?.. வைரலாகும் தோனியின் புதிய க்ளவுஸ் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 09, 2019 06:27 PM

இந்திய ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் தோனி  இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MS Dhoni changed his gloves for the match against Australia

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் விளையாடிய தோனியுன் கீப்பிங் க்ளவுஸில் ராணுவ முத்திரை இடம் பெற்றிருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இதுபோன்ற முத்திரையை பயன்படுத்துவது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என ஐசிசி நிர்வாகம் கூறியது. பின்னர் தோனியின் க்ளவுஸில் இருந்த இந்திய ராணுவத்தின் முத்திரையை அகற்ற வேண்டும் என பிசிசிஐ-க்கு ஐசிசி நிர்வாகம் அறிவுறித்தியது. இது தொடர்பாக பேசிய பிசிசிஐ நிர்வாக குழு தலைவர், தோனியின் கீப்பிங் க்ளவுஸில் இடம் பெற்றிருந்த முத்திரை, விளம்பரத்தை குறிப்பதாகவோ அல்லது ஒரு மதத்தை குறிப்பதாகவோ இல்லை. அது இந்திய ராணுவத்தின் முத்திரைதான். அதானால் இதுதொடர்பாக ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் பிசிசிஐயின் இந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. அதானால் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தோனி இந்தியா ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் முத்திரை இல்லாத க்ளவுஸுடன் தோனி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.